செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்!

கோடை மழையினால் செங்கம் பகுதியில் நெல் மணிலா பயிர்கள் சேதம்,விவசாயிகள் வேதனை

Update: 2024-05-24 02:35 GMT

கோடை மழையினால் சேதமடைந்த நெல் பயிர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் நெல், மணிலா பயிா்கள் சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், புதுப்பாளையம், முன்னூர் மங்கலம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கோடை மழை பெய்தது.

இந்தக் கோடை மழையால் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் முற்றிலும் விளைநிலத்தில் சாய்ந்து மீண்டும் விலை நிலத்திலேயே நெருப்பயிராக முளைக்கத் தொடங்கியது.

பல இடங்களில் அறுவடை இயந்திரம் செல்ல வழி இல்லாமலும், நெல் பயிா்கள் அனைத்தும் விளை நிலத்தில் சாய்ந்துள்ளதால், பயிரை எப்படி அறுவடை செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். அதேபோல, மணிலா பயிா்களும் நிலத்தில் இருந்து அறுவடை செய்ய முடியாமல் அழுகிய நிலையில் இருந்து வருகிறது.

மேலும் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கோடை மழையினால் விலை நிலத்திலேயே நெற்பயிர்கள் சாய்ந்து நெல் மணிகள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியதால் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்து வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்து வந்ததால் மிகவும் வேதனை அடைந்தனர்.

மாவட்ட நிர்வாகமும், வட்டாட்சியா், வேளாண்மைத் துறை அதிகாரிகள், தமிழக அரசும் குழு அமைத்து நெருப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகளின் விலை நிலங்களை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News