ஊரடங்கு மீறல்: கடைகளுக்கு சீல்
முழு ஊரடங்கை மீறி 10 மணிக்கு மேல் விற்பனையில் ஈடுபட்ட கடைகளுக்கு சீல்;
தமிழக அரசு கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முன் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், காஞ்சி பகுதியில் வட்டாட்சியர் மனோகரன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது தடையை மீறி 10 மணிக்கு மேல் செயல்பட்ட இரண்டு இறைச்சிக்கடைகள், மளிகைக் கடை, துணிக்கடை மற்றும் உணவகம் உள்ளிட்ட கடைகளை அதிரடியாக மூடி சீல் வைத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ₹5000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் மோகனராமன், வருவாய் ஆய்வாளர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, உதவியாளர்கள் மற்றும் கடலாடி காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டனர்.