செங்கத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது;
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் செங்கம் காவல்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வட்டாட்சியர் மனோகரன் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குனர் பேசுகையில் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வழிபாட்டுத்தலங்கள் வணிக வளாகங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்