பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்;

Update: 2021-07-09 06:24 GMT

காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் மாட்டு வண்டியில் ஏறி விலை உயர்வை குறைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பெட்ரோல் பங்க் முன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் மாட்டு வண்டியில் ஏறி விலை உயர்வை குறைக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.100 தாண்டியுள்ளது. எரிவாயு விலை, பெட்ரோல் டீசல், விலை உயர்வால், பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. அனைத்து தரப்பு மக்களும் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிளா காங்கிரஸ் தலைவர் வினோதினி சக்திவேல், மகிலா காங்கிரஸ் உறுப்பினர்கள் , வட்டார மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News