செங்கம் பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

செங்கம் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை துவக்கி வைத்து எம்எல்ஏ நல திட்ட உதவிகளை வழங்கினார்;

Update: 2024-07-27 04:00 GMT

மாற்றுத்திறனாளி பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கிரி எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சிவா தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜு, வட்டாட்சியர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் செ.நாச்சிபட்டு, மண்மலை, அரட்டவாடி, தாழையூத்து உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய்துறை, கால்நடைத்துறை, மின்சாரத்துறை வட்டார வளர்ச்சி துறை, காவல் துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட 23 துறைகள் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பெறப்பட்ட மனுக்களுக்கு உ டனடியாக தீர்வு காணப்பட்டது. மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் கணினி பட்டா திருத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் கரவை மாடு கடனுதவி பெறப்படும் திட்டங்களுக்கு ஆணை வழங்கி சிறப்புரை ஆற்றினார் .

விழாவில்  கிரி எம்எல்ஏ பேசுகையில், பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான அரசு தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் திமுக ஆட்சி எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களின் உரிமைக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அனைத்து தரப்பு பெண்களும் பயன்பெற்று வருகின்றனர். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் பொழுது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை.க், எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் அறிவித்தார்.

இதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, விடியல் பயணம் மேற்கொள்ளகட்டணமில்லா பேருந்து வசதி, பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகைபோன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தையும் பெண்களின் உழைப்பை மதிக்க கூடிய அரசு தமிழ்நாடு அரசு என பேசினார்.

முன்னதாக மகளிர் குழு சார்பில் இயற்கை தானிய வகைகள் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் சிறுதானிய வகைகளை ஒவ்வொரு நபரும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயராணி குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News