துணை வேளாண்மை விரிவாக்க மையம் அடிக்கல் நாட்டு விழா
செங்கம் அருகே துணை வேளாண்மை விரிவாக்க மையம் அடிக்கல் நாட்டு விழா: செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சுமார் 29 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாய்ச்சல் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வேளாண்மை துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்