புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் தேசிய ஆணைய தலைவர் நேரில் விசாரணை

புதுப்பாளையம் செயலாளர் தன்னை அவமதிப்பதாக புகாரளித்த ஊராட்சி மன்ற தலைவரிடம் தேசிய ஆணைய தலைவர் நேரில் விசாரணை;

Update: 2021-06-20 14:02 GMT

புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் தேசிய ஆணைய தலைவர் நேரில் விசாரணை

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவராக ஏழுமலை பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு செயலாளர் வேல்முருகன் தன்னை அவமதிப்பதாக தலைவர் ஏழுமலை தன் குடும்பத்துடன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் தொடர்ச்சியாக செயலாளர் வேல்முருகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து எஸ்சி எஸ்டி தேசிய ஆணையத்தின் தலைவர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது தற்போது முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  எஸ்சி எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மக்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். செயலாளரின் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News