செங்கம் அருகே அரசுப்பேருந்து மினி வேன் மோதல்; ஒருவர் உயிரிழப்பு
செங்கம் அருகே நள்ளிரவில் அரசுப்பேருந்தும் மினி வேனும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 17 பேர் படுகாயம்;
விபத்தில் சேதமடைந்த மினி வேன்
செங்கம் அருகே நள்ளிரவு பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்தும், திருக்கோவிலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினிவேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதேபோல் மினி வேனில் வந்த 17 நபர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பெற்று வந்த திருக்கோவிலூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்