முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
செங்கம் முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் எம் எல் ஏ இலக்கிய நூலினை வெளியிட்டார்.;
இலக்கிய நூலினை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் கிரி
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா நூலினை பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் தமிழன் பிரபு வரவேற்புரை வழங்கினார் பேராசிரியர் மோகன் காந்தி வாசகர் வட்ட கௌரவத் தலைவர் முருகமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருப்பத்தூர் தூய கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் மோகன் காந்தி பேசுகையில், நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்த சங்க இலக்கிய புகழ் பெற்ற ஊர் செங்கம். இத்தகைய பெருமைமிக்க ஊரில் முத்தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் ராமராகவன் இந்த நூல் வெளியீட்டு விழாவை முன்னெடுத்து இலக்கிய சேவை செய்வது பாராட்டுக்குரியது. அவர் இலக்கிய சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நூல் ஆசிரியர் கவிஞர் தமிழ்மதி மென்மேலும் பல நூல்களை வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என பாராட்டினார்.
பட்டிமன்ற பேச்சாளரும் முதுகலை ஆசிரியருமான பாவலர் வேலாயுதம், நூலினை திறனாய்வு செய்தார். அப்போது இந்த நூல் இயற்கை, வாழ்வியல், காதல் சமூக அவலங்களை அழகாக எடுத்துக் கூறுவதால் அனைவரும் அவசியம் இந்த நூலை வாங்கி படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
பேராசிரியரும் திரைப்பட பாடலாசிரியர் செந்தில் வேலவன் நாட்டுப்புற பாடல்களை பாடினார்.
நிகழ்ச்சியில் கவிஞர் கிருஷ்ணகுமார், முனைவர் அரங்கன் மணிமாறன், ஆசிரியர்கள், கவிஞர் கீதாமதி, நூலகர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் தமிழ்மதி ஏற்புரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கவிஞர் தமிழ் மதி எழுதிய ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா முத்தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராமராகவன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக் பாஷா நூலினை பெற்றுக் கொண்டார்.