திருவண்ணாமலையில் பா.ஜ.க. மக்களவை தொகுதி அலுவலகம் திறப்பு
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.;
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் பாஜக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது
திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், தொகுதி பொறுப்பாளா் நேரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய பாஜக அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
விழாவில், மக்களவைத்தொகுதி இணை பொறுப்பாளா் ஈஸ்வரன், திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் வாசுதேவன், மாவட்ட பொதுச் செயலா் வினோத் கண்ணா, பொருளாளா் சுப்பிரமணியன், மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் செயலா் அறவாழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம் பகுதியில் பாஜக கொடியேற்று விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாஜக மாவட்ட இளைஞரணி சாா்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
செங்கம் சிவன் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, தளவாநாய்க்கன் பேட்டை, காவாக்கரை, புதுப்பட்டு, தாழையூத்து, பொரசப்பட்டு, தண்டா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பாஜக கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணித் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்சிகெ கொடியேற்றினாா். செங்கம் நகர பகுதியில் இளைஞரணி நகரத் தலைவா் பிரேம்குமாா் ஏற்பாட்டில் 5 இடங்களில் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணி, மாவட்ட பொதுச் செயலா் முருகன், துணைத் தலைவா் சேகா், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் நவீன்குமாா், இளைஞரணிச் செயலா் பாலாஜி, மாவட்ட மகளிா் அணித் தலைவா் ரேணுகா நடராஜன், செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன், ஒன்றியத் தலைவா்கள் முனியப்பன், லதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.