திருப்பத்தூர் பகுதியில் பாஜக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் அஸ்வத்தாமன் திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் 2024, நடைபெற உள்ளது.
முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் அவர்கள் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் ஜோலார்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவா் கூறியது:
திருப்பத்தூரில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்படும். ஜோலாா்பேட்டையில் வந்தே பாரத் ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா், ஒசூா், பெங்களூரு வரை ரயில் பாதை அமைக்கப்படும். அதில் 10,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், ஐசிஎப் போன்று ஒரு உப தொழிற்சாலை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூா், ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு ரயில்பாதையும் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
தொடர்ந்து ஜவ்வாது மலை பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது ஜவ்வாது மலைவாழ் கிராம மக்களோடு கலந்துரையாடி அவர்களது வாழ்க்கை முறை பற்றி கேட்டு அறிந்தார்.
அப்பகுதி மக்களின் அத்தியாபிசிய தேவைகள் விரைவில் பூர்த்தி செய்ய மொழி முயற்சி எடுப்பதாகவும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தின் உதவி கொண்டு நிச்சயமாக செயல்படுத்துவேன் என்று பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் அனைத்து ஊராட்சிகளிலும் மக்களவைத் தொகுதியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்படும். இது, மக்கள் சேவை மையங்களாக செயல்படும்.
இந்த பகுதிக்கு அத்யாவசிய தேவைகளான கழிப்பறை வசதிகள் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைவரது இல்லத்திற்கும் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் . திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் தாமரை மலர்ந்தால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வேன். அதற்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க வேண்டும், எனவே பாஜக சார்பில் போட்டியிடும் எனக்கு இந்த முறை வாய்ப்பளியுங்கள், கண்டிப்பாக உங்களின் எதிர்காலம் நல்ல முறையில் இருக்க நான் இரவு பகல் பாராமல் பாடுபடுவேன் என பேசினார்.
தொடர்ந்து ஜவ்வாது மலை ஜமுனா மரத்தூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய சகோதரர்களிடம் வாக்குகள் சேகரித்தார். பாரதப் பிரதமர் மோடி அவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக செய்த நல திட்டங்களையும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமராக மோடி வரவேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.
பிரச்சாரத்தில், பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் அன்பழகன், ஈஸ்வா், நகர தலைவா் சண்முகம், மாநில வன்னியா் சங்க செயலாளா் ராஜா, பாமக மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.