செங்கம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகள்

செங்கம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2023-06-21 11:37 GMT

காட்டெருமை (பைல் படம்)

செங்கம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டெருமைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள குப்பநத்தம், கிளையூர், கல்லாத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகள் ஜவ்வாதுமலை அடிவார பகுதியில் உள்ளது. இங்குள்ள மலை அடிவாரங்களில் ஏராளமான விவசாய நிலங்களில் விவசாயிகள் பயிர்கள் விளைவித்து பராமரித்து வருகின்றனர்.

குறிப்பாக வாழை, நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பநத்தம் பகுதியில் சுமார் 7 காட்டெருமைகள் ஜவ்வாதுமலைப் பகுதியில் இருந்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலத்தில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, நெற்பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளையும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் காட்டெருமைகளை ஜவ்வாதுமலையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் விரட்டி விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண்மை உதவி இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நெல் பயிா்களில் நோய்த் தாக்குதல் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் பெலாசூா், பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை என பல்வேறு ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் நெல் பயிா் விளைவித்து விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், நெல் பயிா்களில் நோய்த் தாக்குதல் உள்ளதா என வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி ஆய்வு செய்தாா்.

மேலும், விவசாயிகளுக்கு நோய்த் தாக்குதலில் இருந்து பயிா்களை காத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு அவா் ஆலோசனை வழங்கினாா். வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

Tags:    

Similar News