பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்து: சாலையில் உருண்டு ஓடிய பீர் பாட்டில்கள்

பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்திற்குள்ளான ஓட்டுனர்களுக்கு உதவி செய்யாமல் பீர் பாட்டிலை குடிமகன்கள் எடுத்துச் சென்றனர்.

Update: 2022-01-16 06:40 GMT

பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் சாலையில் உருண்டு ஓடிய பீர் பாட்டில்கள்.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை வழியே, தர்மபுரி நோக்கி மதுபானத்தை ஏற்றுக்கொண்ட லாரி பயணம் செய்தது. இந்த லாரியை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த தனுஷ் (வயது 42) என்பவர் இயக்கினார். லாரியில் கிளீனராக இளையராஜா (வயது 38) என்பவர் பயணித்தார்.

இந்த நிலையில், லாரி அதிகாலை நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மிட்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றுகொண்டு இருக்கையில், எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதனால் லாரியில் இருந்த பீர் பாட்டிகள் சாலையில் சிதறி சேர்த்தமடைந்த நிலையில், பாட்டிலில் இருந்த பீர் சாலைகளில் வழிந்தோடியது. இதனைக்கண்ட சில குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுக்கு உதவி செய்ய கூட முன்வராமல், நன்றாக இருந்த பீர் பாட்டிலை எடுத்து ஓட்டம் பிடித்தனர்.

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஓட்டுநர் மற்றும் கிளீனரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மதுபானத்தை அள்ளிக்கொண்டு இருந்தவர்களையும் அடித்து விரட்டினர். விசாரணையில், ரூ.15 இலட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் உடைந்துபோனது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News