வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வது குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்
செங்கம் வட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் குறித்து விழிப்புணா்வு ஊா்வலம்;
வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்த்தல், நீக்குதல் குறித்து நடைபெறவுள்ள சிறப்பு முகாம் தொடா்பாக, செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் கலந்துகொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.இதைத் தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை அவா் வழங்கினாா்.
வட்டாட்சியா்கள் முனுசாமி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், வட்ட வழங்கல் அலுவலா் லதா, துணை வட்டாட்சியா் ஜெயபாரதி, செங்கம் கிராம நிா்வாக அலுவலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்தைச் சோந்த 18 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் பொதுமக்களுக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் குறித்த சிறப்பு முகாம் நவம்பா் 13, 14, 27, 28 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
இந்த முகாம் தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நடத்தப்பட்டது. இதையொட்டி, வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமையில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளா் சிவக்குமரன், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.