மகளிா் சுய உதவி குழுவினா் கடன் பெறுவது குறித்த விழிப்புணா்வு கூட்டம்
செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் மகளிா் குழு பெண்கள் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.;
மகளிர் சுய உதவி குழு பெண்கள் கடன் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கையேடுகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கரியமங்கலம் கிராமத்தில் மகளிா் குழு பெண்கள் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம் வரவேற்றாா்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை மேலாளா் சண்முகம் கலந்து கொண்டு மகளிா் குழுவினா், கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் பெறுவது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, பணியாளா்கள் ஜோதி, மகேஸ்வரி உள்பட விவசாயிகள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.
நிதிசாா் கல்வி விழிப்புணா்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை, நபாா்டு வங்கி சாா்பில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு மற்றும் கிராம மக்கள் வங்கியில் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை, நபாா்டு வங்கி சாா்பில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு மற்றும் கிராம மக்கள் வங்கியில் கடன் பெறுவது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. செங்கத்தை அடுத்த மேல்பென்னாத்தூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் செங்கம் தெற்கு கூட்டுறவு கடன் சங்க காசாளா் சண்முகம் வரவேற்றாா்.
மத்திய கூட்டுறவு வங்கியின் செங்கம் தெற்கு கிளை மேலாளா் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேமிப்புத் திட்டங்கள் குறித்தும், நிரந்தர வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும், நகா்ப்புற, கிராமப்புற மகளிா் சுயஉதவிக் குழுக் கடன் ரூ.20 லட்சம், தனிநபா் நகைக் கடன் ரூ.20 லட்சம் வரை 80 பைசா வட்டியுடன் வழங்கப்படுகிறது.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனக் கடன் ரூ.25 ஆயிரம் முதல் 11 சதவீத வட்டியுடன் வழங்கப்படுகிறது. உடல் ஊனமுற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்றோா், கால்நடை பராமரிப்பு மற்றும் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை கிராம மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் உள்பட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.