தண்டராம்பட்டு :வட்ட அளவிலான தடகளப் போட்டி
தண்டராம்பட்டு ஊராட்சியில் வட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றிய அளவில் நடைபெற்ற மாபெரும் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாபெரும் தடகள விளையாட்டு போட்டியினை மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம்,தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்முடியனூர் மினி விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான ஆண்கள் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 14 , 1 7 , 19 வயதிற்கு உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. அதன்படி 100 முதல் 3000 மீட்டர் வரையிலான ஓட்ட போட்டிகள், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். சே.கூடலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் தணிகைமலை அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மு.பெ. கிரி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அவர்கள் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழினை எ.வ.வே.கம்பன் வழங்கினார்.
இந்நிகழ்வில்,தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஏஇசி கல்வி குழுமத்தின் இயக்குநர் பொன்.முத்து, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பன்னீர்செல்வம் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் திவ்யாசபாரத்தினம், சத்யா வெங்கடேசன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் கோவிந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயேஸ்வரி சக்கரைவர்த்தி, முத்துலட்சுமி முருகேசன், தலைமையாசிரியர்கள் பிரேமானந்தன் ,சங்கர் உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன் ,தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட அரசு அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர்கழக உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.