பலாப்பழம் வாங்குவதற்காக சென்ற ஜோதிடர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழப்பு

தண்டராம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஜோதிடர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-05-18 07:16 GMT

பைல் படம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 39), திருமணம் ஆகவில்லை. இவர் சன்னியாசியாக வாழ்ந்து வந்தார். வெள்ளயங்கிரி, திருவண்ணாமலை தேனி மலைப்பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஜோதிடம் பார்க்கும் வேலையை செய்து வந்தார்.

பலாப்பழம் வாங்குவதற்காக தண்டராம்பட்டு ரோட்டில் உள்ள மேல்செட்டிப்பட்டு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வெள்ளயங்கிரி சென்றார். பழத்தை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து செட்டிப்பட்டு நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வெள்ளிங்கிரி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் (57) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News