தண்டராம்பட்டு தடுப்பூசி சிறப்பு முகாமில் உதவி திட்ட இயக்குனர் ஆய்வு
தண்டராம்பட்டு தடுப்பூசி சிறப்பு முகாமை உதவி திட்ட இயக்குனர் இன்று ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் லட்சுமி நரசிம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு தண்டராம்பட்டு பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி , முகக் கவசம், சமூக இடைவெளி இவற்றின் நன்மைகளைக் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார். இந்த முகாமில் 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உடன் மருத்துவர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், செவிலியர்கள், பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்