செங்கம் அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வட்டார ஒருங்கிணைப்பாளரை கண்டித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-06-08 02:28 GMT

ஆர்ப்பாட்டம் செய்த அங்கன்வாடி பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மருத்துவனை அருகே அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு தலைமை மருத்துவமனை எதிரே திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அடுத்த கரிமலைப்பாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் கணவனை இழந்த மாற்றுத்திறனாளி சத்தியவாணி  என்பவர் நாள்தோறும் அங்கன்வாடி மையத்திற்கு பணிக்கு தாமதமாக வருவதாக வட்டார ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தா அவரின் ஊனத்தை குறை கூறி இழிவுபடுத்தி பேசியதால் அங்கன்வாடி உதவியாளர் சத்தியவாணி ஜூன் 6 ஆம் தேதி மண்மலை கிராமத்தில் உள்ள வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தனது கைபேசியில் தனக்கு ஏற்பட்ட நிலையை காணொளி பதிவு செய்து சக பணியாளர்களுக்கு அனுப்பி வைத்து அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பேச்சு மூச்சு இன்றி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அங்கன்வாடி உதவியாளர் சத்திய வாணி என்பவரை இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தா என்பவர் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கைமேற்கொண்டு அவரை பணியிடம் மிக்க செய்ய வேண்டும் என பணியாளர்கள் ஒன்று திரண்டு வாகனங்களை சிறை பிடித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தா மீது நடவடிக்கை எடுக்க விட்டால் வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வட்டார ஒருங்கிணைப்பாளர் பிரீத்தா என்பவரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பணியாளர்கள் சார்பில் நடைபெறும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News