செங்கம் அருகே அம்பேத்கர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவ ஒப்படைப்பு

செங்கம் அருகே அகற்றப்பட்ட அம்பேத்கார் சிலை மீண்டும் அதே இடத்தில் பிரமாண்ட முறையில் திறந்து வைக்கப்படவுள்ளது.;

Update: 2024-07-06 01:37 GMT

செய்தியாளர்களிடம் பேசிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி

கடந்த அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுவப்படும் அதன் திறப்பு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் தோக்கவாடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் மார்பளவு சிமெண்ட் சிலை சிதலமடைந்து பழுதடைந்து இருந்ததை அகற்றி அதே இடத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு முழு உருவ வெண்கல சிலை கடந்த 2016 ம் ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்டது.  பழைய சிமெண்ட் சிலையை அகற்றி அதே இடத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலை ஊர் பொதுமக்களில் உழைப்பால் ஊர் பொதுமக்களின் சொந்த செலவில் அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அம்பேத்கரின் முழு உருவ வெண்களை சிலை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை மூலம் அதிமுக ஆட்சியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அகற்றப்பட்டது. 

அம்பேத்காரின் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோக்கவாடி பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் அப்போது ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டங்களில் காரணமாக அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த உடன் மீண்டும் அதே இடத்தில் அம்பேத்கரின் திருவருவர் சிலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனைப்படி சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கிரி அம்பேத்கரின் சிலை அமைப்பதற்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் பேரில் அரசின் பாதுகாப்பில் உள்ள அம்பேத்கரின் சிலை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் செங்கம் வட்டாட்சியரிடம் இருந்து அம்பேத்கரின் சிலையை பெற்று தோக்கவாடி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஒப்படைத்தார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கிரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,  தோக்கவாடி பகுதியில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த சிலை சிதலமடைந்துள்ளதால் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் பிரம்மாண்ட முறையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் மீண்டும் இதே இடத்தில் அம்பேத்கர் சிலை வைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களுக்கும் பகுதி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கூறினார்.

Tags:    

Similar News