அரசு பள்ளியை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்

செங்கம் அருகே அரசு பள்ளியை அதில் படித்த முன்னாள் மாணவர்கள் சீரமைத்தனர்;

Update: 2022-06-11 07:25 GMT

செங்கம் அருகே அரசு தொடக்கப் பள்ளியை ரூபாய் 2.5 லட்சத்தில் முன்னாள் மாணவர்கள் சீரமைத்ததால்  புதுப்பொலிவுடன்  காணப்படும் வகுப்பறைகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு தொடக்கப் பள்ளியை ரூபாய் 2.5 லட்சத்தில் முன்னாள் மாணவர்கள் சீரமைத்தனர்.

செங்கத்தை அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளான டைல்ஸ் கற்கள் பதித்தல், விளையாட்டு மைதானத்திற்கு சிமெண்ட் தரை தளம் அமைத்தல், சுவர்களுக்கு வண்ணம் தீட்டுதல், சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர் ,கழிப்பறை வசதி,  ஆகியவற்றை தாங்களாகவே முன்வந்து சொந்தச்செலவில் செய்து முடித்தனர்.  இந்த சிறப்பு வாய்ந்த பணியை செய்த முன்னாள் மாணவர்களுக்கு பெற்றோர்கள், கிராம மக்கள், ஆசிரியர்கள், நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News