அதிமுக ஆட்சி விரைவில் அமையும், முன்னாள் அமைச்சா்!

அதிமுக ஆட்சி விரைவில் அமையும் என முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

Update: 2023-11-04 01:34 GMT

வாக்குச்சாவடி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட அக்ரிகிருஷ்ணமூர்த்தி, எம்எல்ஏ

தமிழகத்தில் அதிமுக ஆட்சி விரைவில் அமையும் என முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா்.

செங்கம் அருகே அன்வராபாத், குயிலம், ஆலப்புத்தூா், புதுப்பட்டு, கொட்டாவூா், குப்பனத்தம் ஆகிய பகுதியில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், வாக்குச்சாவடி நிா்வாகிகள் தேர்வு  நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலா், போளூர் எம்எல்ஏ, அக்ரி கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கான நலத் திட்டங்கள் எதுவும் முறையாக கிடைக்கவில்லை.

அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகள் சிறப்பாக பணியாற்றினால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி விரைவில் அமையும் என்றாா். கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

தலைமைக் கழக பேச்சாளா் அமுதாஅருணாச்சலம், கிழக்கு ஓன்றியச் செயலா் அருணாச்சலம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, சங்கா், குமாா், குப்பன், வழக்குரைஞா் செல்வம், மேலவை பிரதிநிதி ஜேசிபி ரவி, பிரசாந்த்குமாா், ஜெயவேல், சசிகுமாா், பழக்கடை காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம் மேற்கு ஒன்றிய அதிமக செயலா் மகரிஷிமனோகரன் வரவேற்றாா்.

அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்

இதில் தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர் இளமாறன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்டோர் அந்த கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ,  திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் ,   தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ,   நகர மன்ற உறுப்பினர்கள்  ,  கழக நிர்வாகிகள் ,   கழகத் தொண்டர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News