தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா

செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது

Update: 2022-08-03 16:00 GMT

நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் ஸ்ரீஅலமேலுமங்கை, பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடரமண பெருமாள் கோவில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையில் சென்னியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிபெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இன்று ஆடிபெருக்கு விழா தென்பெண்னை ஆற்றில் நடைபெற்றது.

பக்தர்கள் பொங்கலிட்டு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காதணிவிழா நடத்தியும் வழிபட்டனர்., புதுமண தம்பதியினர் புது தாலி கயிறு மாற்றுதல், சென்னம்மாள் பாறையில் மஞ்சள், சிவப்பு, பொறி கடலை, கருமணி வலையல் போன்றவை வைத்து படையல் போடுதல் போன்ற பல்வேறு பிராத்தனைகள் செய்து வழிபட்டனர்.

விழாவில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலிருந்தும், சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை, போளுர், ஊத்தங்கரை, செங்கம், சிங்காரப்பேட்டை, அருர் நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.பத்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News