திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
சேத்துப்பட்டில் மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 37 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
செங்கம் அருகே பொரசப்பட்டு வனப் பகுதியை ஒட்டி உள்ள பி.எல்.தண்டா கிராமத்தைச் சேர்ந்தவா் முனுசாமி .இவா், பொரசப்பட்டு வனப் பகுதியில் உள்ள விலங்குகளை நாட்டு வெடிகுண்டு மூலம் வேட்டையாடுவதாக மாவட்ட காவல் அலுவலகத்துக்கும், வெடிபொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் சென்றது.
அதன் அடிப்படையில் தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணராஜ் மற்றும் மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்டோா் கொண்ட செங்கம் போலீஸாா் பி.எல்.தண்டா கிராமத்துக்குச் சென்று முனுசாமியின் வீட்டை சோதனையிட்டனா்.
அப்போது, மாட்டுக் கொட்டகையில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 37 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் வெடி மருந்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, முனுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மணல் கடத்தல்:4 பேர் சிறையிலடைப்பு
சேத்துப்பட்டு அடுத்த ஓதலவாடி செய்யாற்று படுகையில், அனுமதி இன்றி மணல் கடத்திய ஒரு மினி லாரி, இரண்டு நான்கு சக்கர மாட்டு வண்டி ஆகியவற்றை போளூர் டிஎஸ்பி பறிமுதல் செய்து, 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மோதலவாடி ஊராட்சி செய்யாற்று படுகையில், இரவு – பகல் பாராமல், மாட்டு வண்டிகளிலும் லாரிகளிலும் மணல் கடத்துவதாக போளூர் டி.எஸ்.பி. கோவிந்தராஜுக்கு கிடைத்த தகவலின் படி,டிஎஸ்பி கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன் ,பாஷ்யம் கொண்ட குழுவினர் காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஓதலவாடி செய்யாற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த ஒரு மினி லாரியும், நான்கு சக்கர இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட தச்சூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ், மகாலிங்கம் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய ஒதலவாடி கிராமத்தைச் சேர்ந்த அசோக், முனியப்பன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.