செங்கம் அருகே 630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 பேர் கைது!

செங்கம் அருகே 630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா்,

Update: 2024-10-23 03:07 GMT

செங்கம் அருகே 630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 பேர் கைது ( மாதிரி படம்)

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் மீனாட்சி தலைமையிலான போலீஸாா்  திருவண்ணாமலை - செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். 

அப்போது, அந்த வழியாக பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் 2.52 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 630 கிலோ குட்கா போதை பொ ருட்க ளை 2 1 மூட்டைகளில் அடைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.

உடனடியாக ஓட்டுனர் உட்பட இரண்டு நபர்களை சரக்கு வாகனத்துடன் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கவுஷிக், அக்ஷய்குமாா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்து என்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுதாகரன் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் மீனாட்சி மற்றும் தனிப்படை காவலர்கள் மூன்று நபர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து செங்கம் நீதிம ன்ற முன்னிலையில் ஆஜர் படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். 

செங்கம் பகுதியில் மாடுகளை திருடிய நான்கு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சி கடைக்கு விற்பனை செய்தது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கம், புதுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மாடுகள் திருடு போவது குறித்து காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.  இதன் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீசார் மாடு திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து கடந்த இரண்டு தினங்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் புது பாளையப்பகுதியை சேர்ந்த மணிகண்டன், கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை மற்றும் இரு நபர்கள் இரவு நேரத்தில் மாடுகளை திருடி இறைச்சி கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து மாடுகளை திருடி விற்பனைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

மேலும் இவர்களுடன் மாடு திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News