பாலியல் வன்கொடுமை வழக்கில் ஊராட்சித் தலைவரின் கணவா் உள்பட 4 பேர் கைது
செங்கம் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் ஊராட்சித் தலைவரின் கணவா் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.;
செங்கம் அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் ஊராட்சித் தலைவரின் கணவா் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரியமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் சீனுவாசன், இவர் ஏற்கனவே காரியமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் ஆக பதவி வகித்தவர்.
இந்நிலையில் இவரது விவசாய நிலத்தில் பணியாற்றியவரின் மனைவியை ஊராட்சி நிா்வாகத்தின் பணித்தள பொறுப்பாளராக நியமித்து, அவா் சில மாதங்களாக பணியாற்றி வந்தாா்.
இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு சீனுவாசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், அவரை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்து தனது கணவா், மாமனாா், மாமியாரிடம் அந்தப் பெண் கூறியும், அவா்கள் சீனுவாசனுக்கு ஆதரவாக பேசினராம். இதுகுறித்து செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சீனுவாசனிடம் விசாரணை நடத்தினா்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மகளிர் காவல் நிலைய போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது சீனிவாசன் கூறியதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், அடுத்த முறை நடைபெற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மீண்டும் தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்றால் திருமணம் செய்து கொண்ட இளம் வயது பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஜோசியர் சீனிவாசனிடம் கூறியதாகவும், இதனால் சீனிவாசன் அந்தப் பெண்ணின் மாமனார் மாமியார் கணவரிடம் அவர்களது மருமகளை தன்னுடன் நெருக்கமாக பழக ஏற்பாடு செய்யுமாறு அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.
பணத்திற்கு ஆசைப்பட்டு கணவர் மாமனார் மாமியார் இதற்கு உடன்பட்டதாகவும், இதனால் அந்த பெண் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜோசியக்காரர் பேச்சைக் கேட்டு 100 நாள் வேலையில் பணித்தள பொறுப்பாளராக இருந்த பெண்ணிடம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அத்துமீறிய சம்பவம் அந்த பெண்ணின் குடும்பத்தினருமே உடந்தையாக இருந்ததும் செங்கம் வட்டத்தில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.