எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு
செங்கம் அருக, தேர்தல் விதிமுறைகள் காரணமாக மூடி வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலையை இரவு நேரத்தில் மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொ-அண்ணாநகர் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்tirunt மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் முழு திருவுருவ சிலையை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உடைத்து சேதப்படுத்தினர். இதனை அறிந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலையை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை உடைத்து சேதப்படுத்தி இருப்பது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.