தமிழகத்திற்கான மத்தியஅரசு திட்டம் பற்றிய துண்டுப்பிரசுரம்

மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்துள்ள திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு பாஜகவினர் துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

Update: 2021-03-09 16:30 GMT


தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அளித்துள்ள திட்டங்கள் பற்றி மத்திய அமைச்சர் அமித்ஷா பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாவட்ட பார்வையாளர் அருள் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுப்பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசின் சார்பில் தமிழகத்தில் செய்த நலத்திட்டங்கள் பற்றிய  துண்டு பிரசுரங்களை வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களிடம் வழங்கினர்.

இதில் பாஜக மாநில பட்டியலின செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொது செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் உதயன், நகர தலைவர் ராஜேந்திரன் என பலர் பங்கேற்று வழங்கினார்கள்.

Tags:    

Similar News