காளை விடும் விழாவுக்கு அனுமதி கோரி போராட்டம்

காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-24 13:29 GMT

பைல் படம் 

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா முன்னிட்டு காளை விடும் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் நாளிலேயே ஊரடங்கு உத்தரவு காரணமாக காளைவிடும் திருவிழா நடத்த முடியவில்லை.

கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் காளைவிடும் திருவிழா நேற்று  நடத்த அனுமதி கோரி ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா, டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மாலை காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி வேண்டும் என அவ்வூரில் உள்ள மந்தைவெளி பேருந்து  நிறுத்தத்தில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News