அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபசு காப்பாற்ற சென்ற இளைஞர் பலி
மின்கம்பியை மிதித்த பசுமாட்டினை காப்பாற்ற முயன்ற இளைஞர், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.;
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபசு காப்பாற்ற சென்ற இளைஞர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கஸ்தம்பாடி கிராமத்தை சார்ந்தவர் செல்வராசு (வயது 29). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். ஆரணி பகுதியில் பெய்த மழையின் காரணமாக, இவரது வீட்டின் அருகே இருந்த மின்சார கம்பி கீழே அறுந்து விழுந்துள்ளது.
செல்வராசு வளர்த்து வந்த பசு மாடு மின்கம்பியை மிதிக்கவே, மின்சாரம் தாக்கி பசு மாடு அலறியுள்ளது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வராசு மாட்டினை காப்பாற்ற முயன்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக செல்வராசுவின் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பசு மாடும், செல்வராசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த களம்பூர் காவல் துறையினர், செல்வராசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.