கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது

ஆரணி அருகே கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-09 10:00 GMT

கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் உதயகுமார் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று  ஆரணி - வாழைப்பந்தல் சாலையில் உள்ள பாறைகுளம் அருகே சென்றபோது வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, உதயகுமாரிடமிருந்து 6,000 ரூபாயை பறித்து சென்றார். 

இது சம்பந்தமாக உதயகுமார் ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புகழ், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறி செய்த நபர் பையூர் சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், நந்தகுமார், முருகன் மற்றும் போலீசார் சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆரணி வராகமூர்த்தி தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மகன் சிவா (21) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து 4 பவுன் செயின், மோட்டார் சைக்கிள், ரூ.2,000 பறிமுதல் செய்தனர். இவர் பல்வேறு வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News