விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
ஆரணியில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ஆரணி நகரில் அருணகிரி சத்திரம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆரணி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) ரூபன்குமார், டவுன் காவல் ஆய்வாளர் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா வாங்குவதற்காக சுற்றித்திரிந்து கொண்டிருந்த இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை கொடுத்து போலீசார் நைசாக யார் அவர் எங்கு விற்பனை செய்யப்படுகிறது என கண்டறிந்தனர்.
உடனடியாக போன் மூலம் கஞ்சா வேண்டும் என்று தகவல் தெரிவித்து அங்கு சென்ற போலீசார் ஒரு வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர் ஆரணி அருணகிரிசத்திரம் பகுதி நாராயணன் தெருவைச் சேர்ந்த ரூபேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.