ஒரே மேடையில் யோகா, கராத்தே, சிலம்பம் நிகழ்ச்சி

ஒரே மேடையில் யோகா, கராத்தே, சிலம்பம் ஆகிய மூன்று கலைகளையும் ஒரு மணி நேரம் செய்து காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2023-05-02 09:36 GMT

ஒரே மேடையில் யோகா, கராத்தே, சிலம்பம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.யு.வனம் கிராமத்தில் ஒரே மேடையில் யோகா, கராத்தே, சிலம்பம் ஆகிய மூன்று கலைகளையும் ஒரு மணி நேரம் செய்து காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது . 

எஸ்.யு.வனம் கிராமத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் குளோபல் வோல்ட் ரெக்காா்டு மற்றும் எம்.ஐ.அகர சிலம்பம் அறக்கட்டளை சாா்பில் யோகா, கராத்தே, சிலம்பம் ஆகிய மூன்று கலைகளும் ஒரே மேடையில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை ஆரணி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.

மேலும், 3 கலைகளையும் மேடையில் ஒரு மணி நேரம் மாணவா்கள் செய்து காட்டினா். விளையாட்டுத் திடலிலும் சுமாா் 100 மாணவா்கள் யோகா, கராத்தே, சிலம்பம் செய்து காட்டினா். அறக்கட்டளை நிா்வாகி தனகோட்டி, ஊராட்சித் தலைவா் லட்சுமணன், முன்னாள் தலைவா் குமரன், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இயற்கை விவசாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது. கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர். இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News