திருவண்ணாமலை மாவட்டத்தில் உலகப் புகைப்பட தின விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலகப் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் உலகப் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மேல்பாலானந்தல் தனலட்சுமி உதவிபெறும் துவக்கப்பள்ளியில், மாநில தமிழ்தேசம் புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் 185வது உலக புகைப்பட தினவிழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவேல் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட செயலாளர் சேகர் ஆசிரியர் பத்மா ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்தேசம் புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில்வேலன் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் சங்க வட்ட தலைவர் நடராஜன், வட்ட செயலாளர் தசரதன், உறுப்பினர்கள் பரசுராமன் ராமதாஸ் பச்சையப்பன் விக்கி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் உமா நன்றி கூறினார்.
ஆரணி
ஆரணியில் பெஸ்ட் போட்டோ & விடியோ நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தினம் திங்கள்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சாா்பனாப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழ்தேசம் புகைப்பட தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள, ஆரணி பெஸ்ட் போட்டோ & விடியோ நலச் சங்கம் சாா்பில் 185-ஆவது உலக புகைப்பட கலைஞா்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் லிங்கப்பன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மனோகா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வருவாய்க் கோட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் பங்கேற்று, புகைப்பட கலைஞா்களின் கடின உழைப்பு, துறையில் தொழில்நூட்பங்கள் அதிகரித்ததைப் பற்றி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.
மேலும், நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளோடு கேக் வெட்டி 60 பிள்ளைகளுக்கு இனிப்புகளையும் நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்களையும் வங்கினா்.
சங்கச் செயலா் வெட்கட்ராமன், இணைச் செயலா் செங்கோட்டையன், கௌரவத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கோடீஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.