ஆரணியில் ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
விழுப்புரத்தில் இருந்து காட்பாடிைய நோக்கி சென்ற சரக்கு ரயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானார்.;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ரோடு ரயில் நிலைய தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. தகவலை அறிந்து களம்பூர் நால்வர் தெருைவச் சேர்ந்த சாவித்திரி என்பவர் அப்பகுதிக்கு சென்று பார்த்தார். ரயிலில் அடிபட்டு பலியானவர் தனது கணவர் ராஜாராமன் (வயது 50) என்பதை உறுதி செய்து கதறினார். நேற்று இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடிைய நோக்கி சென்ற சரக்கு ரயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானதாக தெரிய வருகிறது.
காட்பாடி ரயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அவர், கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிந்துள்ளார். அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இந்நிலையில் ஆரணி ரோடு ரயில் பாதையில் அடிபட்டு பலியாகியது தெரிய வந்துள்ளது.