திருமணமாகாத ஏக்கத்தில் விரக்தி; தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தேசூர் அருகே உள்ள பெலாகாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் திருமணம் செய்துகொள்ள பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.
திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்த பாலாஜி, தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.