ஆரணி, செய்யாற்றில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஆரணி மற்றும் செய்யாற்றில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-03-15 11:29 GMT

ஆரணியில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி பேசிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் செய்யாற்றில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் 21-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கட்சி கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் இராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஆகியோர் சிறப்பிழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த மேல்பூதேரி கிராமத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றியச் செயலா் ராமநாதன் ஏற்பாட்டில் இந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று,எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அதிமுக புதிய கல்வெட்டை திறந்து வைத்து, கட்சிக் கொடியேற்றி ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சுப்பராயன், மாவட்ட விவசாய அணிச் செயலா் மண்டி பாலன், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் திருமூலன், கன்னியப்பன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சிவா, ஒன்றிய மாணவரணிச் செயலா் முருகன், கிளைச் செயலா் வீரபத்திரன் , மாவட்ட, நகர, ஒன்றிய, கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News