ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆரணியை அடுத்த தச்சூரில் அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.;
அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அண்ணா அரசு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களிடையே தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியும், வேலை வாய்ப்பு தொடங்குவதற்கான பயிற்சியும் கல்லூரி முதல்வர் ஆர்.அருளரசன் தலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.