திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.;
14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான முருகேஷ் தலைமை வகித்தாா்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) குமரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியா் சாப்ஜான், தேசிய தகவலியல் மைய அலுவலா் இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆட்சியா் முருகேஷ் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழியேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் சாந்தி மற்றும் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கோட்டாட்சியா் தனலட்சுமி தொடங்கிவைத்தாா்.
வட்டாட்சியா் மஞ்சுளா, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் குமரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியில், ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியானது, இறுதியாக வட்டாட்சியா் அலுவலகத்தை சென்றடைந்தது.
முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு வருவாய்த் துறை அலுவலா்கள், காவல் துறை, நகராட்சி அலுவலா்கள் பங்கேற்ற வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் நித்யா, ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வேட்டவலம்
ஜமீன் அகரம் பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தையெட்டி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தாசில்தார் சரளா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தனபால், தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன், மண்டல துணை தாசில்தார் மாலதி, வட்ட வழங்கல் அலுவலர் ஜான்பாஷா, சப் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடன் பங்கேற்றனர்.
போளூரில் வாக்காளர்கள் உறுதிமொழி விழிப்புணர்வு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன், உதவியாளர் சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் மஞ்சுளா, சத்துணவு பணியாளர் கனகா உள்ளிட்டோர் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு வாக்காளர்களின் உறுதிமொழி வாயிலாக விழிப்புணர்வு வழங்கினர். உடன் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.