சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் பேக்கரியை நொறுக்கிய மர்ம கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் பேக்கரியை நொறுக்கிய மர்ம கும்பல்

Update: 2021-04-15 09:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரி நடத்திவருகிறார். நேற்று மாலை பேக்கரியில் இருவர் டீ, பிஸ்கட், குளிர்பானம், ஆகியவற்றை சாப்பிட்டுள்ளனர்.

கடை பணியாளர் பணம் கேட்டபோது அந்த மர்ம நபர்கள் கடையில் பணிபுரிபவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு இல்லாமல் மேலும் 10 க்கும் மேற்பட்டோரை செல்போன் மூலம் அழைத்து கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்துள்ளனர்.

மேலும் கடையில் பணிபுரியும் டீ மாஸ்டரையும் தாக்கி, கடையில் உள்ள பேக்கரி பொருட்கள் வைக்க கூடிய கண்ணாடி அலமாரியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.  

இதனைப் பார்த்த மற்றவர்கள் பயத்தில் உறைந்து இருந்தனர். மேலும் கடையில் இருந்த வாடிக்கையாளர்களின் குழந்தைகளையும் தாக்கும் காட்சி வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. மேலும் சிறு குழந்தைகளின் அலறல் சத்தமும் கேட்டதாக சொல்லப்படுகிறது.

பரபரப்பாக இருக்கக்கூடிய முக்கிய சாலையில், மாலை நேரத்தில் கடையில் கூட்டம் அதிகமாக இருக்கக் கூடிய நேரத்தில் ரவுடிகளின் செய்த அட்டகாசம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடையின் மேலாளர் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பிச் சென்ற பத்துக்கும் மேற்பட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News