நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்

ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

Update: 2022-01-12 10:30 GMT

ஆரணியை அடுத்த கொசப்பாளையம் பெரிய சாயக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ.எம்.ரஞ்சித். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவரது வீட்டின் பின்பகுதியில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தேரி கிராமத்தை சேர்ந்த பக்தன் என்பவர் அவர்களை பிடித்து, இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 21), கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News