ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

ஆரணி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-24 06:33 GMT

கடை உரிமையாளர் செல்வகுமார்.

ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு புகார்கள் வந்தது.

அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் உள்பட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது வடுகசாத்து கிராமத்தில் அரசு பள்ளி எதிரே உள்ள யாதவர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 41) என்பவருடைய கடையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் செல்வகுமார், கடையில் பணிபுரிந்த கல்லூரி மாணவன் ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News