ஆய்வின்போது குழந்தைகளுடன் செல்ஃபி: திருவண்ணாமலை கலெக்டர் உற்சாகம்

வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட திருவண்ணாமலை கலெக்டர், ஆட்சியருடன் செல்பி எடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.

Update: 2021-12-22 01:15 GMT

சேத்துப்பட்டு மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, பெரணமல்லூர் பகுதியில் நடந்துவரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி,  சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் எட்டி வாடி, முடையூர், நரசிங்கபுரம், தும்பூர், ஆகிய ஊராட்சியில் இருளர் குடியிருப்பு ,குடிநீர் இணைப்பு, ஊராட்சி மன்றக் கட்டிடம் ,சமுதாய பண்ணைக்குட்டை, பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்தல், சத்துணவு மையம், கூட்டுறவு கடை, ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

பின்பு பெரணமல்லூர் ஒன்றியத்தில் சந்திரம் பாடி, கெங்காபுரம், மேல் சாத்தமங்களம், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் முருகேசன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது பள்ளி சிறுவர்களிடம் உரையாடி மகிழ்ந்தார்.  மேல் சாத்தமங்கலம் பகுதியில், அங்கு இருந்த பள்ளி சிறுவர்கள் மாவட்ட கலெக்டரிடம் உங்களிடம் ஒரு செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார். அவர்களை பாராட்டி,  அவர்களுடன் உரையாடினார்.  பின்பு சிறுவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதனால், சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆய்வின்போது சேத்துப்பட்டு ஒன்றிய குழுத்தலைவர் ராணி அர்ஜுனன், பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், போளூர் தாசில்தார் சண்முகம், உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கால்நடைத்துறை இணை இயக்குனர் சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News