வீட்டுமனை ரேஷன் கார்டு கேட்டு பழங்குடியினர் , நரிக்குறவர்கள் மனு
வீட்டுமனை ரேஷன் கார்டு கேட்டு பழங்குடியினர் , நரிக்குறவர்கள் மனு
வீட்டுமனை, ரேஷன் கார்டு கேட்டு பழங்குடியினர் , நரிக்குறவர் இன மக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணமாலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா, கொழப்பலூர், நெடுங்குணம், வில்லி வனம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு ரேஷன் கார்டு, வீட்டுமனை, சாதி சான்று வழங்க வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில், பழங்குடியின அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்கள் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை ரேஷன் கார்டு வழங்க கோரி மீண்டும் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.