வண்ணாங்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பயிற்சி வகுப்பு
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் ஊராட்சியில் சமுதாய கூட வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பாக உள்ளாட்சி அமைப்புகள், சமூக நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு செய்தல் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். வண்ணாங்குளம் ஒருங்கிணைப்பாளர் தயாளன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
பயிற்சியில் மாநில முதன்மை பயிற்றுனர் சேகர், மாவட்ட பயிற்றுனர் லோகநாதன் ஆகியோர் கிராம வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கி பேசினர். வண்ணாங்குளம், காட்டுகாநல்லூர், அழகு சேனை, அப்பநல்லூர், கொளத்தூர், ஆண்டிபாளையம், 5 புத்தூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், கிராம கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம ஒழிப்பு வறுமை சங்க செயலாளர்கள், விவசாய கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடிந்ததும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.