ஆரணியில் சோகம்: ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி

ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2021-09-11 06:42 GMT

உயிரிழந்த லோஷினி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். அரிசி ஆலை தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு லோஷினி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் இரவு ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி உணவு வகைகளைச் சாப்பிட்டுள்ளனர்.

அதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அவர்களுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டு ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சை பெற்றனர். அதன்பின், சிறுமி லோஷினிக்கு உடல் நலம் பாதிப்பு அதிகமானதால் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

மேலும், அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சம்பவம் நடந்த அசைவ ஓட்டலில் உணவு மாதிரிகளைச் சேகரித்து விசாரணை நடத்தினார். ஆரணி நகர போலீசார் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஓட்டலின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News