திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Tiruvannamalai Congress Party Agitaition திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tiruvannamalai Congress Party Agitaition
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தியின் பாரத்ஜோடோ நியாய் யாத்திரை பயண பேருந்தை அசாம் மாநிலத்தில் வழிமறித்து தாக்குதல் நடத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை பேருந்தை அசாம் மாநிலத்தில் தடுத்து நிறுத்தியும், ராகுல் காந்தி வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜகவின் வன்முறை செயலை கண்டித்தும் , தலைவர் ராகுல் காந்தி வழிபடுவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்ததற்கும் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி காங்கிரஸ் சார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், சேகர், நகர மன்ற உறுப்பினர் ஜெயவேல், வட்டார தலைவர்கள் சோலை முருகன், பழனி ,மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நகர காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் அணி காங்கிரஸ் நிர்வாகிகள், விவசாய பிரிவு நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கத்தில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராகுல் காந்தியின் பாரத்ஜோடோ நியாய யாத்திரை பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்து கொண்டனர்.
போளூர்
போளூர் மற்றும் சேத்துப்பட்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, நாகையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அஸ்ஸாம் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட பேருந்தை சிலா் வழிமறித்து, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, போளூர் மற்றும் சேத்துப்பட்டு பகுதிகளில் வட்டார தலைவர் முனிரத்தினம் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், போளூர் சேத்துப்பட்டு வட்டார நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.