திருவண்ணாமலை: தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை குறித்து போலீசார் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பான்பர விற்பனை செய்யப்படுகிறது என கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்;
சேத்துப்பட்டு, தேவிகாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் விற்பனை செய்யப்படுகிறது என்று வந்த தகவலையடுத்து, போலீசார் கடை கடையாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.
சேத்துப்பட்டு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவிகாபுரம், நெடுங்குணம், நம்பேடு ஆகிய பகுதிகளில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது குறித்து சேத்துப்பட்டில், இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வரதராஜன், அண்ணாமலை மற்றும் போலீசார் பல்வேறு பகுதியில் பிரிந்து சென்று, கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது பெரியார் சிலை அருகே ஒரு பெட்டிக் கடையிலும், கன்னி கோவில் தெருவில் மற்றொரு பெட்டிக் கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. 2 கடைகளை வருவாய்த்துறையினர் பூட்டி சீல்வைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
ஆரணி பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை என்று டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் எச்சரித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடா்பாக, அனைத்து வியாபாரிகள் சங்க நிா்வாகிகளுடன் விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் உத்தரவின் பேரில், நகர காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.
நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணி முன்னிலை வகித்தாா். உதவி ஆய்வாளா் சுந்தரேசன் வரவேற்றாா்.
கூட்டத்தில், நகரில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. இதுகுறித்து 10581 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வியாபாரிகள் சங்க நிா்வாகிகளிடம் போலீஸாா் வழங்கினா்.