திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க விழா நடைபெற்றது.

Update: 2024-09-13 03:17 GMT

ஊரக வளர்ச்சித் துறை சங்க கொடி ஏற்றி வைத்த வட்டார தலைவர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க விழா நடைபெற்றது.

ஆரணியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தினத்தையொட்டி சங்கக் கொடியேற்றும் விழா நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட்டாரத் தலைவா் தென்னரசு தலைமை வகித்து சங்கக் கொடியேற்றினாா். மேலும் வட்டாரத் தலைவா் தென்னரசு சங்க நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி, மாவட்ட இணைச் செயலா் விஜயகுமாா், தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்க கோட்டத் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வட்டாரக் கிளை துணைத் தலைவா் கற்பகம் நன்றி கூறினாா். 

கலசப்பாக்கம்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலசபாக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சங்க கொடியேற்றி சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் இனிப்புகளை வழங்கி சங்க நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலசபாக்கம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சங்க கொடியை ஏற்றி சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை இனிப்புகளை வழங்கி பேசியதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 38வது தினத்தை முன்னிட்டு நம் சங்கம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. வரும் காலங்களில் நம் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும் அளவிற்கு போராட்டம் சிறப்பான முறையில் நடத்த வேண்டும். நமது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நம் அனைத்து போராட்டத்திலும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறும் வரை போராட வேண்டும், அதற்கு நிர்வாகிகள் நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், மத்திய அரசு மற்றும் மாநில அரசு நம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க தைரியமாக போராட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சங்கம் மாவட்ட தலைவர் அண்ணாமலை கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைசெயலாளர் ஆறுமுகம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் வட்டார கிளை தலைவர் அருண், வட்டார நிர்வாகிகள் கீதா, ஜெயந்தி, மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News