ஆரணியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு

ஆரணியில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டுச் சம்பவம் நடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-01-13 06:18 GMT

ஆரணியில் திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு

ஆரணி ஆரணிப்பாளையம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மனைவி மகேஸ்வரி (வயது 60). இவர்களின் மகன் கிருஷ்ணகுமார், சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மகேஸ்வரி மட்டும் தனியாக ஆரணியில் வசித்து வருகிறார்.

மகேஸ்வரியின் தாயாருக்கு முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததால், அவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னை முடிச்சூர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு கடந்த 10-ந்தேதி சென்று விட்டார்.

இந்நிலையில் அவரின் வீடு மற்றும் பீரோக்கள் திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரிக்கும், ஆரணி டவுன் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் மணியின் மனைவியான குப்பம்மாள் (60) என்பவருடைய சகோதரர் இறந்து விட்டதால், துக்க காரிய நிகழ்ச்சிக்கு அருகில் உள்ள சத்யாநகருக்கு சென்றுள்ளனர். அவரின் வீட்டுப் பூட்டும் உடைக்கப்பட்டு கதவுகள், பீரோக்கள் திறந்து கிடப்பதாக அப்பகுதியினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

குப்பாம்மாள் மற்றும் உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், வெள்ளிப் பாத்திரங்கள் இருந்ததைப் பார்த்து நிம்மதி அடைந்தனர். அவர் அணியும் தங்க நகைகளை கையோடு எடுத்துச் சென்றால் தப்பியது. 

மகேஸ்வரி ஊரிலிருந்து வந்த பிறகுதான் அவர்கள் வீட்டில் திருட்டு போன பொருட்களின் விவரங்கள், தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் இருவரும் தனித் தனியாக புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரித்தனர். கைரேகை நிபுணர் ரமேஷ் கைேரகையை பதிவு செய்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News